• +94 65 22 41 069
  • dvtbatticaloa@vtasl.gov.lk

Facebook இன் புதிய Explore Feed

  • 2017-10-25
  • Nusair

நேற்று அல்லது இன்று பேஸ்புக் பாவித்திருந்தால் நீங்கள் ஒரு முக்கியமான மாற்றத்தை அவதானித்திருக்கக்கூடும். சிலவேளை “நான் லைக் செய்த பேஜ்கள் எல்லாம் எங்கே?” என்று தேடி இருக்கவும் கூடும். இதற்கு காரணம் பேஸ்புக் புதிதாக தனது டைம்லைனின் செய்துள்ள மாற்றம்தான். இதுவரை காலமும் News Feed இல் எமது நண்பர்களின் போஸ்ட் அப்டேட், அதேபோன்று நாம் லைக் செய்த பேஜ்களின் அப்டேட்கள் காணப்படும். இனிமேல் News Feed நமது நண்பர்களின் ஆக்டிவிட்டிகளை தாங்கி நிற்க பேஜ் ஆக்டிவிட்டி எல்லாம் Explore Feed க்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Explore Feed நமது கடந்த கால பேஜ்லைக்குகளை மையப்படுத்தி புதிய பல (நாம் லைக் செய்யாதவற்றைக்கூட) விடயங்களை தாங்கி வரப்போகிறது. இதன் செயற்பாடுகள் அல்கோரிதம்களால் தீர்மானிக்கப்படும். கடந்த காலங்களில் ஒருசில மொபைல் பயனர்களினூடாக பரீட்சிக்கப்பட்ட இவ்வசதி தற்போது மொபைல் மற்றும் நமது டெஸ்டொப்களுக்கும் உத்தியோகபூர்வமாக வந்துள்ளது.

பாவனையாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறினாலும் பேஸ்புக்கின் வருவாயை அதிகப்படுத்தும் செயற்பாடாகவே இதனை நாம் காணலாம். ஸ்பொன்சேர்ட் பக்கங்களை News Feed யில் அனுமதிக்கும் பேஸ்புக்கின் செயற்பாடு இதற்கு நல்ல உதாரணமாகும்.

சரி இப்போதுள்ள சிக்கல்தான் என்ன?

நீங்கள் உங்கள் நண்பர்களின் ஆக்ட்டிவிட்டிகளை பார்க்க News Feed ஐயும் பேஜ் அப்டேட்டுகளை பார்க்க Explore Feed க்கும் இரு தடவை அலையவேண்டி இருக்கும். அதாவது நீங்கள் பேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவே இந்த ஏற்பாடு.

Explore Feed ஐ பார்ப்பதற்கு உங்கள் மொபைல் பேஸ்புக்கில் காணப்படும் ரொக்கெட் ஐகனையும் டெஸ்க்டாப்பில் பேஸ்புக்கின் இடப்பக்கத்தில் News Feed க்கு கீழே காணப்படும் ரொக்கெட் ஐகனையும் அழுத்த வேண்டும்.

Desktop Facebook Explore Feed

Facebook Explore Feed on Mobile

Reccent Posts

சாத்தியமாகும் Inception? – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்

Read more


Facebook இன் புதிய Explore Feed

Read more